FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

கௌரி ஸ்பிராட்டுக்கு அமீர் கான் பரிசளித்த கோடியில் ஒரு மாணிக்க மோதிரம்! என்னெ ஸ்பெஷல்?

கௌரி ஸ்பிராட்டுக்கு அமீர் கான் அணிவித்த திருமண மோதிரம் கோடியில் ஒரு மாணிக்க மோதிரம் என்றால்..

திருமண மோதிரம் - file photo
பகிர்:

பாலிவுட் நடிகர் ஆமீர்கான், தன்னுடைய மனைவி கௌரி ஸ்பிராட்டிக்கு பரிசளித்த மாணிக்க மோதிரம் பற்றிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த மோதிரத்தைத் தயாரிக்க 256 மணிநேரங்கள், 131 கைவினைஞர்கள் பணியாற்றி யிருக்கிறார்களாம். ஒரே மாணிக்கக்கல் பொதித்த இந்த மோதிரம் கோடியில் ஒரு மோதிரம் (One In A Million) என நகைத் தயாரிப்பு நிபுணர்கள் வர்ணிக்கிறார்கள்.

இந்த திருமண மோதிரம் உருவான விதம் குறித்து நாள்தோறும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

Advertisement

Advertisement

அதாவது, ஆமிர் கான் தனது மனைவி கௌரி ஸ்பிராட்டிக்கு, மிகவும் அரிதான 'கபோஷன்-கட்' (cabochon-cut) என்ற வகையைச் சேர்ந்த மடகாஸ்கர் மாணிக்கக் கல் பதிக்கப்பட்ட, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திருமண மோதிரத்தைப் பரிசளித்துள்ளாராம்.

ஆமிர் கான், தனது நீண்ட கால தோழியான கௌரி ஸ்பிராட்டை ஜூலை 5-ஆம் தேதி பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார். இது அவருடய மூன்றாவது திருமணமாகும்.

மணமக்களின் அழகான ஆடை அலங்காரங்கள் என எல்லாவற்றையும் தாண்டி, கௌரிக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட திருமண மோதிரம்தான் பலரது கவனத்தையும் ஈர்த்தது.

காரணம், அரிய ரத்தினக்கல், மிக நுணுக்கமான அழகிய கைவினைத்திறன் போன்றவைதான். மிகப் புகழ்பெற்ற நகை தயாரிப்பு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்த மோதிரத்தின் மையத்தில், மடகாஸ்கரிலிருந்து பெறப்பட்ட மிகவும் அரிதான, இயற்கையான கபோஷோன்-கட் ரூபி கல் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரு மோதிரத்தை 131 கைவினைக் கலைஞர்கள் சேர்ந்து உருவாக்கியிருக்கிறார்கள் என்றாலே இதன் மகத்துவம் புரிந்திருக்கும். வழக்கமான மோதிரங்கள் போல இந்த மோதிரம் அமைக்கப்படவில்லை. மாணிக்கக் கல், ஒரு க்ரீடம் போன்ற தங்க அலங்காரத்துக்குள் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த மாணிக்கக் கல், அதன் அலங்காரம், வடிவமைத்த விதம் என அனைத்துமே இதற்கு பெரும் புகழ் சேர்த்திருக்கிறது. மேலும், பல தலைமுறைக்கு, இந்த மோதிரத்தின் வேலைப்பாடு, கைவினை நுணுக்கம் அனைத்தும் கொண்டு வருவதற்கான ஒரு முக்கிய கருவியாகவும் இது அமைந்திருப்பதாக பலரும் பாராட்டுகிறார்கள்.

summary

A priceless ruby ​​ring gifted by Aamir Khan to Gauri Shinde what makes it so special?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments