இந்த வாரம் ஓடிடியில் படங்கள்!
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
பேட்ரியாட்
நடிகர்கள் மோகன் லால் மற்றும் மம்மூட்டி இணைந்து நடித்துள்ள பேட்ரியாட் திரைப்படம், ஜூன் 5 ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மகேஷ் நாராயண் இயக்கத்தில், சுஷின் ஷியாம் இசையில் உருவான இப்படத்தில் நடிகர்கள் குஞ்சக்கோ போபன், ஃபஹத் ஃபாசில், நயன்தாரா, ரேவதி, கிரேஸ் ஆண்டனி, தர்ஷனா ராஜேந்திரன், ராஜீவ் மேனன் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
29
இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் உருவான 29 திரைப்படத்தில் கதாநாயகனாக விது நடிக்க, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார்.
இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
தி ரைஸ் ஆப் அசோகா
சதீஷ் நினாசம் நாயகனாக நடித்துள்ள 'தி ரைஸ் ஆப் அசோகா' படத்தில் நாயகியாக சப்தமி கெளடா நடித்துள்ளார்.
மேலும் இந்தப் படத்தில் பி சுரேஷ், சம்பத் மைத்ரேயா, ரவிசங்கர், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, யாஷ் ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் ஜூன் 5 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
கேடி தி டெவில்
பிரேம் இயக்கத்தில் துருவா சர்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியான கிரைம் திரில்லர் திரைப்படம் கேடி தி டெவில்.
இந்தத் திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஜூன் 5-ல் ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
கார்மேனி செல்வம்
நடிகர் சமுத்திரக்கனி நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் கார்மேனி செல்வம். இப்படத்தை, இயக்குநர் ராம் சக்ரி இயக்கியுள்ளார்.
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர்கள் லக்ஷ்மி பிரியா, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.
கடந்த வார ஓடிடி (கர)
நடிகர் தனுஷின் கர திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
இந்தப் படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம், மமிதா பைஜூ, கருணாஸ், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லீடர்
துரை செந்தில் குமார் இயக்கத்தில் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்திருக்கும் திரைப்படம் லீடர்.
இந்தத் திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.
கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ்
கல்யாண வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ் இணையத் தொடரை ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம்.
'கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ்' தொடரை விஷ்ணு சந்திரன் மற்றும் கண்ணன் தாமரைக்குளம் ஆகியோர் இயக்கியுள்ளனர். சித்தார்த் பாபு, நைனிடா மரியா, கிருஷ்ணா விஜயச்சந்திரன் மற்றும் மன்யா மல்லிகா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ என்ற புதிய இணையத் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் இந்தத் தொடரில் காயத்ரி சாஸ்திரி, நிகிலா சங்கர், லுதுஃப், கிஷோர், ஷ்ரவ்னிதா ஸ்ரீகாந்த், சித்தார்த் பாபு, பிரமோதினி, நம்ரிதா, ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் தொடர் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
ரூம்மேட்ஸ்
நான்கு நண்பர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள கன்னட மொழிப்படம் ரூம்மேட்ஸ்.
கிரிக்கெட் திடலில் நடக்கும் ஒரு சிறிய சண்டை, எப்படி பெரிய ஈகோ மோதலாக மாறுகிறது என்பதை நகைச்சுவை பாணியில் கூறியிருக்கிறார்கள். இந்தப் படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.