இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
எல்ஐகே
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் எல்ஐகே.
இந்தத் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
Advertisement
Advertisement
வாழ - 2
இயக்குநர் விபின் தாஸ் எழுத்தில் சவின் எஸ். ஏ இயக்கத்தில் வாழ - 2 திரைப்படம், கடந்த ஏப். 2-ல் திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடியில் நாளை(மே 8) வெளியாகிறது.
பரதநாட்டியம் 2: மோகினியாட்டம்
கிருஷ்ணதாஸ் முரளி இயக்கத்தில் சைஜு குருப், சுராஜ் வெஞ்சாரமூடு, ஜெகதீஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான மலையாள மொழிப்படம் பரதநாட்டியம் 2: மோகினியாட்டம்.
நகைச்சுவை - திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகவுள்ளது.
ஓ பட்டர்ஃபிளை
விஜய் ரங்கநாதன் இயக்கத்தில் உளவியல் திரில்லர் படமாக வெளியான திரைப்படம் ஓ பட்டர்ஃபிளை.
நிவேதிதா சதீஷ், சிபி புவனா சந்திரன், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம், சன் நெக்ஸ்ட் ஓடிடியில் நாளை வெளியாகிறது.
சாத்தான்: தி டார்க்
ஐரா, சாந்தினி தமிழரசன், எஃப் ஜே உள்ளிட்டோர் நடிப்பில் மணிகண்டன் ராமலிங்கம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் சாத்தான்: தி டார்க்.
அஸ்தினாபுரம் என்ற மலைக்கிராமத்தில் சாத்தான் வழிபாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம், நாளை அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது.
டகாய்ட்: எ லவ் ஸ்டோரி
அதிவி சேஷ், மிருணாள் தாக்கூர் நடிப்பில் வெளியான அதிரடி பாணியில் எடுக்கப்பட்டுள்ள தெலுங்கு மொழிப்படம் டகாய்ட் : எ லவ் ஸ்டோரி.
இந்தத் திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் நாளை காணலாம்.
கடந்த வார ஓடிடி (தி கேரளா ஸ்டோரி - 2)
தி கேரளா ஸ்டோரி - 2 திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
காமக்யா நாராயண் சிங் இயக்கியுள்ள இந்தப் படத்தை, விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்துள்ளார்.
ராகாசா
மானசா சர்மா இயக்கத்தில் நகைச்சுவை மற்றும் திகில் கலந்து எடுக்கப்பட்டு வெளியான தெலுங்கு மொழிப்படம் ’ராகாசா’.
இந்தத் திரைப்படத்தில் சங்கீத் சோபன், நயன் சரிகா, வெண்ணெலா கிஷார், கெட்டப் சீனு, பிரம்மாஜி, ரோகிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ராகாசா திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
மனிதன் தெய்வமாகலாம்
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் மனிதன் தெய்வமாகலாம்.
கடந்த ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
டிஎன் 2026
நடிகர் தம்பி ராமையா கதை மற்றும் வசனம் எழுதி, அரசியல் கலந்த நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டுள்ள ’டிஎன் 2026’ படத்தை, அவரது மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படத்தை ஆஹா, அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம்.
முஸ்தபா முஸ்தபா
இயக்குநர் பிரவீன் சரவணன் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ் நாயகனாக நடித்துள்ள புதிய படம் முஸ்தபா முஸ்தபா.
இந்தத் திரைப்படத்தை ஆஹா ஓடிடியில் காணலாம்.
Let's take a look at which movies are releasing on OTT platforms this week.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.