ஹார்ட்டின்! இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! (ஆக. 14 - 20)
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
ஹார்ட்டின்
அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் சனந்த் நாயகனாக நடித்த படம் ஹார்ட்டின். இதில், மடோனா செபாஸ்டியன், இமையா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
இந்தப் படம் அமேசான் பிரைம் மற்றும் ஆஹா தளங்களில் நாளை(ஆக. 14) வெளியாகிறது.
Advertisement
Advertisement
காட்டாளன்
நடிகர்கள் ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன் நடிப்பில், பால் ஜார்ஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் காட்டாளன்.
யானை தந்த வேட்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகியுள்ளது.
காக்டைல்- 2
நடிகர் ஷாகித் கபூர் நாயகனாக நடித்துள்ள காக்டைல்- 2 என்ற புதிய படத்தில் ரஷ்மிகா மந்தனா, கீர்த்தி சனோன முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
லுவ் ரஞ்சன், தருண் ஜெயின் எழுதி, ஹோமி அடஜானியா இயக்கிய காக்டைல்- 2 திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது.
பிரேம தேசம்
ஸ்ரீகாந்த் சித்தம் இயக்கத்தில் உருவான பிரேம தேசம் திரைப்படத்தில் திரிகன், மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
காதல் மற்றும் நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஈடிவி வின் ஓடிடி தளங்களில் பார்க்கலாம்.
மிஸ்டர் வொர்க் பிரம் ஹோம் (mr. work from home)
மதுதீப் செலிகானி இயக்கத்தில் திரிகன் மற்றும் பாயல் ராதாகிருஷ்ணா முக்கிய வேடங்களில் நடித்துள்ள திரைப்படம் மிஸ்டர் வொர்க் பிரம் ஹோம்.
காதல் மற்றும் கிராமியப் பின்னணியில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் நாளை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகிறது.
அச்யுத அவதாரம்
கலாசாரப் பின்னணியைக் கொண்ட பெண்ணின் குடும்பம், இணைய மோசடியால் அனைத்தையும் இழக்கிறது. இதிலிருந்து இந்தக் குடும்பம் எப்படி மீள்கிறது என்பதே இந்தப் படத்தின் கதை.
புனித் இயக்கத்தில், மாளவிகா நந்தன், சீமா ஜி நாயர் நடித்துள்ள இந்தப் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
கடந்த வார ஓடிடி (நூறு சாமி)
நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்து வெளியான நூறு சாமி திரைப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
இயக்குநர் சசியின் இயக்கத்தில், நடிகர்கள் ஸ்வாசிகா, அஜய் திக்ஷன், கருணாஸ், லிஜோமோல் ஜோஸ், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இதயம் முரளி
நடிகர்கள் அதர்வா, ஃபகத் ஃபாசில், பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர், ரக்ஷன், டிராவிட் செல்வம், நிஹாரிகா, ஏஞ்சலீன் உள்ளிட்டோர் நடித்துள்ள இதயம் முரளி படத்தை, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணலாம்.
ஓ சுகுமாரி
ஐஸ்வர்யா ராஜேஷின் ஓ சுகுமாரி திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
இந்தப் படத்தில் ஜான்சி, முரளிதர் கௌடே, ஆமினி, கவிரெட்டி ஸ்ரீனிவாஸ், கோட்டா ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
உயிர்
நடிகர் ரோஷன் மேத்யூ நடிப்பில் உருவான உயிர் திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் காணக் கிடைக்கிறது.
இயக்குநர் எம். பத்மகுமார் இயக்கத்தில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட திரைப்படம் உயிர். நடிகர் ரோஷன் மேத்யூ காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளார்.
வதந்தி - 2
நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள வதந்தி - 2 இணையத் தொடரை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.
வதந்தி - 2 இணையத் தொடரில் நடிகர் சசிகுமார், மூஸா ராஜா எனும் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். மேலும், இத்தொடரில் நடிகர்கள் அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, அனகா, யஷ்வந்த் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
லெனின்
முரளி கிருஷ்ணா அப்புரு இயக்கத்தில் அகில் அக்கினேனி, பாக்யஸ்ரீ உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் லெனின்.
1976 ஆம் ஆண்டின் பின்னணியில் நடக்கும் ஒரு கிராமத்துச் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
சத்தியத்தில் சம்பவித்தது
பிரசாந்த் மோகன் இயக்கத்தில் நடிகர்கள் ஆகாஷ் மெனன், திலீஷ் போத்தன், ஜானி ஆண்டனி, தில்ஷனா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சத்தியத்தில் சம்பவித்தது.
இந்தத் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.
Let take a look at which movies and web series are set to release on OTT platforms this week.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.