இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
கர
நடிகர் தனுஷின் கர திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
இந்தப் படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம், மமிதா பைஜூ, கருணாஸ், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
லீடர்
துரை செந்தில் குமார் இயக்கத்தில் தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடித்திருக்கும் திரைப்படம் லீடர்.
இந்தத் திரைப்படம் நாளை(மே 29) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ்
கல்யாண வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ் இணையத் தொடர் நாளை ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
'கசின்ஸ் அண்ட் கல்யாணம்ஸ்' தொடரை விஷ்ணு சந்திரன் மற்றும் கண்ணன் தாமரைக்குளம் ஆகியோர் இயக்கியுள்ளனர். சித்தார்த் பாபு, நைனிடா மரியா, கிருஷ்ணா விஜயச்சந்திரன் மற்றும் மன்யா மல்லிகா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்
நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் 'பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ என்ற புதிய இணையத் தொடரில் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.
மேலும் இந்தத் தொடரில் காயத்ரி சாஸ்திரி, நிகிலா சங்கர், லுதுஃப், கிஷோர், ஷ்ரவ்னிதா ஸ்ரீகாந்த், சித்தார்த் பாபு, பிரமோதினி, நம்ரிதா, ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்தத் தொடர் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
ரூம்மேட்ஸ்
நான்கு நண்பர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள கன்னட மொழிப்படம் ரூம்மேட்ஸ்.
கிரிக்கெட் திடலில் நடக்கும் ஒரு சிறிய சண்டை, எப்படி பெரிய ஈகோ மோதலாக மாறுகிறது என்பதை நகைச்சுவை பாணியில் கூறியிருக்கிறார்கள். இந்தப் படத்தை ஜீ5 ஓடிடியில் பார்க்கலாம்.
கடந்த வார ஓடிடி(வாரண்ட்)
இயக்குநர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் நடிகர்கள் பாலாஜி சக்திவேல் மற்றும் காளி வெங்கட் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்திருக்கும் புதிய இணையத் தொடர் ’வாரண்ட்’.
இந்த இணையத் தொடரை ஜீ 5 ஓடிடி தளத்தில் காணலாம்.
சிஸ்டம்
அஸ்வின் ஐயர் திவாரி இயக்கத்தில் நடிகைகள் ஜோதிகா, சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள சிஸ்டம் திரைப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.
வழக்குரைஞர்களான ஜோதிகா, சோனாக்ஷி சின்ஹா இருவரும் வெவ்வேறு வழக்குகள் மூலம் ஒன்றிணையும் கதையாக இப்படம் உருவாகியுள்ளது.
மதுவிது
மலையாளத்தில் வெளியான நகைச்சுவை, ரொமான்டிக் பாணியில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் மதுவிது. விஷ்ணு அரவிந்த் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தத் திரைப்படத்தை சோனி லைவ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
பீஷ்மர்
தயான் ஸ்ரீனிவாசன், விஷ்ணு உன்னிகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான நகைச்சுவை கலந்த திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் பீஷ்மர்.
இந்தத் திரைப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.
சதிலீலாவதி
தேவ் மோகன், லாவண்யா திரிபாதி, மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடிப்பில் வெளியான தெலுங்கு மொழி நகைச்சுவைத் திரைப்படம் சதிலீலாவதி.
இந்தத் திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
Let's take a look at which movies are releasing on OTT platforms this week.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.