ஹிப்ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு 2! 4 ஆவது பாடல் வெளியீடு!
மீசைய முறுக்கு 2 படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது குறித்து...
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நாயகனாக நடிக்கும் மீசையமுறுக்கு 2 திரைப்படத்தின் “அடிபோடி” எனும் பாடல் வெளியாகியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கி, இசையமைத்து நாயகனாக நடித்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் “மீசையமுறுக்கு”.
நடிகை குஷ்பு சுந்தரின் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹிப்ஹாப் ஆதியின் “மீசையமுறுக்கு 2” படத்தில் கேத்திகா ஷர்மா, யூடியூபர் ஹர்ஷத் கான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ள “மீசையமுறுக்கு 2” படத்தின் “அடி போடி” எனும் புதிய பாடலை இன்று (ஜூன் 24) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
ஏற்கெனவே, இப்படத்தின் ஆரா 10/10, பப்பாளி பழமே, கோயிந்தம்மா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
The song "Adipodi" from the movie Meesaya Murukku 2 has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.