முகப்பு
செய்திகள்

குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன்: ஐஸ்வர்யா லட்சுமி

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி குழந்தை வளர்ப்பு குறித்து பேசியுள்ளார்.

Updated On : 30 ஜூன் 2026, 6:20 pm IST
ஐஸ்வர்யா லட்சுமி - aishwarya lekshmi
பகிர்:

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி திருமணம் மற்றும் குழந்தை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ந்தமிழில் ஆக்‌ஷன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா லட்சுமி, பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மாமன் திரைப்படம் வெற்றியைப் பெற்றது. தற்போது கட்டா குஸ்தி இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ஜூலை 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய நடிகை ஐஸ்வர்யா லட்சுமியிடம், ‘நீங்கள் பொதுவெளியிலேயே திருமணம் செய்ய மாட்டேன் என்றும் திருமணத்திற்கு எதிரான கருத்தையும் சொல்லியிருந்தீர்கள்... இப்போது என்ன நினைக்கிறீர்கள்?’ எனக் கேட்கப்பட்டது.

அதற்கு ஐஸ்வர்யா லட்சுமி, “ஆம். இப்போதும் திருமணம் குறித்த என் பார்வை அப்படியேதான் இருக்கிறது. திருமணம் என்பது பல பிரச்னைகளைக் கொண்டது. இன்றும் அதனை அறிந்துகொண்டே இருக்கிறேன். ஆனால், கட்டா குஸ்தி - 2 படப்பிடிப்பில் அம்மாவாக நடிக்கும் போது எனக்கும் ஒரு குழந்தை இருந்தால் நன்றாக இருக்குமே எனத் தோன்றியது” எனக் கூறியுள்ளார்.

Actress Aishwarya Lekshmi has shared her thoughts on marriage and having children.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments