ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் விபத்து: இளைஞர் பலி!
ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் விபத்து...
ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் பலியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தாக சில நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காட்சிகளில் திருப்தி இல்லாததால் இயக்குநர் நெல்சன் மேலும் 15 நாள்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு சென்னை பனையூரிலுள்ள ஆதித்யராம் ஸ்டூடியோவில் செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், இன்று வீடு போன்ற செட் அமைப்பில் மின்விசிறியை மாட்டும்போது, சேலத்தைச் சேர்ந்த 28 வயதான கார்த்திகேயன் என்கிற இளைஞர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Advertisement
Advertisement
மின்சாரத்தால் தூக்கியெறியப்பட்ட இளைஞரின் உடலைக் கைப்பற்றிய கானத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த்தின் திரைப்படத்தில் பணியாற்றிய இளைஞரொருவர் விபத்தில் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The death of a young man in an accident during the filming of Jailer 2 has caused shock.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.