ஆச்சரியப்படுத்தும் கருப்பு வசூல்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கருப்பு வசூல் குறித்து....
நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தில் வசூல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர்கள் சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் பெரும்பாலான ரசிகர்களுக்குப் படம் பிடித்திருந்ததால் முதல் நாளிலிருந்து இன்றுவரை ஹவுஸ்ஃபுல் நிலையே தொடர்ந்து வருகிறது.
Advertisement
Advertisement
தமிழகம் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கில் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்தாண்டின் அதிகம் வசூலித்த திரைப்படங்களின் பட்டியலில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.
இந்த நிலையில், இப்படம் 3 நாள்களில் உலகளவில் ரூ. 147 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது, நடிகர் சூர்யாவின் அதிகம் வசூலித்த படமாக மாறவுள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
The box office collections for actor Suriya's film Karuppu have been announced.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.