அய்யனார் துணை படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடிய நடிகர்கள்!
அய்யனார் துணை படப்பிடிப்பு தளத்தில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து...
அய்யனார் துணை படப்பிடிப்பு தளத்தில் நடிகர் முன்னாவின் பிறந்தநாளை சக நடிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடினர்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு அய்யனார் துணை தொடர் ஒளிபரப்பாகி வருகிறது
இத்தொடரில் எதிர்நீச்சல் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை மதுமிதா நாயகியாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அரவிந்த் சேஜு நடித்து வருகிறார். இவர்களுடன் அரவிந்தின் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நடிகர் ரோசரி, இவர்களுக்குத் தந்தையாக நடிக்கிறார்.
Advertisement
Advertisement
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களில், அதிக டிஆர்பி புள்ளிகளைப் பெற்ற தொடராக, அய்யனார் துணை உள்ளது. மக்கள் மனம் கவர்ந்த தொடரான இதில், கதாபாத்திரங்களின் பெயர்கள் சேரன், சோழன், பாண்டியன், பல்லவன், வானதி என இதிகாச கதாபாத்திரங்களின் பெயர்களாக வைக்கப்பட்டுள்ளது இத்தொடரின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
பிடிக்காத திருமணத்தில் இருந்து தப்பிக்க நான்கு சகோதரர்கள் உள்ள வீட்டின் மகனை போலியாக திருமணம் செய்துகொண்டு அந்த வீட்டில் நாயகி சந்திக்கும் சவால்களை மையமாக வைத்து இந்தத் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
தொடரில் நடிக்கும்போது மட்டுமின்றி, தனிப்பட்ட வாழ்க்கையிலும் இவர்கள் நண்பர்களாக உள்ளனர். அவ்வபோது குழுவாக வெளியே சென்று படங்களைப் பதிவிடுவதை அய்யனார் துணை குழுவினர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், சேரன் பாத்திரத்தில் நடித்துவரும் நடிகர் முன்னாவுக்கு படப்பிடிப்பு தளத்திலேயே பிறந்தநாள் கொண்டாடி அய்யனார் துணை குழுவினர் மகிழ்ந்துள்ளனர். முன்னாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், காரின் மீதே கேக் வைத்து முன்னாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுமட்டுமின்றி தனது குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விடியோவையும் முன்னா பகிர்ந்துள்ளார். இவருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Birthday Celebration on Vijay TVs Ayyanar Thunai shooting spot Set Actor Munna Birthday
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.