இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!
இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...
ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள், இணையத் தொடர்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.
இசகப்பட்டணம்
தெலுங்கு இயக்குநர் கேரி பி.எச். இயக்கத்தில் நடிகர்கள் சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள இணையத் தொடர் இசகப்பட்டணம். இந்த தொடர் இன்று (ஜூலை 2) அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியிருக்கிறது.
சூப்பர் சுப்பு
நடிகர் சந்தீப் கிஷன், மிதிலா பால்கர், முரளி சர்மா ஆகியோர் நடிப்பில் பதின்ம வயதோருக்கான நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டுள்ள இணையத் தொடர் சூப்பர் சுப்பு. இந்தத் தொடர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று (ஜூலை 2) வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
ஹேங்மேன்
புதுமுகங்கள் நடிப்பிலும், இந்த வாரம் வெளியாகியுள்ள வெளியான ஒரே தமிழ்ப் படமுமான ஹேங்மேன், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் நாளை (ஜூலை 3) வெளியாகிறது. இந்தப் படம் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது.
மோலிவுட் டைம்ஸ்
மலையாள இயக்குநர் அபினவ் சுந்தர் நாயக் இயக்கத்தில் நடிகர்கள் நஸ்லென், சங்கீத் பிரதாப், சுஜித்ராஜ் வி, ஷரப் யு தீன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நகைச்சுவை பாணியில் வெளியான திரைப்படம் மோலிவுட் டைம்ஸ்.
சிறந்த இயக்குநராக வேண்டும் என ஆசைப்படும் இளைஞரின் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் நாளை (ஜூலை 3) வெளியாகிறது.
குர்துகோஸ்துன்னாயி
ரொமான்டிக் கதையில் உருவாகியுள்ள தெலுங்கு இணையத் தொடர் குர்துகோஸ்துன்னாயி. இந்தத் தொடர் ஈடிவி வின் ஓடிடி தளத்தில் நாளை (ஜூலை 3) வெளியாகிறது.
முத்தாஸி
கேரள - கர்நாடக எல்லையில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் திகில் சம்பவங்களின் அடிப்படையில் மலையாளத்தில் எடுக்கப்பட்டுள்ள இணையத் தொடர் முத்தஸ்ஸி. இந்தத் தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை (ஜூலை 3) காணலாம்.
வீரபத்ருணி ரகசியம்
தெலுங்கு இயக்குநர் பீமகனி ஸ்ரீ வர்தன் ரெட்டி இயக்கத்தில் நடிகர்கள் அன்னி , ரகு குஞ்சே எடுக்கப்பட்டுள்ள இணையத் தொடர் வீரபத்ருணி ரகசியம். கிராம மக்களின் மூடநம்பிக்கையால் எதிர்கொள்ளப்படும் பிரச்னைகள் பற்றி த்ரில்லர் பாணியில் இந்தத் தொடர் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடர் ஜீ5 ஓடிடி தளத்தில் நாளை (ஜூலை 3) வெளியாகிறது.
கடந்த வார ஓடிடி
பிளாஸ்ட்
நடிகர்கள் அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியான பிளாஸ்ட் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.
அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் ஆக்சன் பாணியில் எடுக்கப்பட்ட பிளாஸ்ட் திரைப்படம், கடந்த மே 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மூன்றாம் கண்
நடிகர்கள் விதார்த், கலையரசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மூன்றாம் கண், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.
Movies releasing on OTT this week
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.