முகப்பு
செய்திகள்

டெல்னா டேவிஸின் ஆடுகளம் தொடரின் படப்பிடிப்பு நிறைவு!

ஆடுகளம் தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்தது தொடர்பாக...

Updated On : 1 ஜூலை 2026, 3:46 pm IST
ஆடுகளம் தொடர் - படம்: இன்ஸ்டாகிராம்
பகிர்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஆடுகளம் தொடரின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

நடிகை டெல்னா டேவிஸ் பிரதான பாத்திரத்தில் நடிக்கும் ஆடுகளம் தொடரில் அவருக்கு ஜோடியாக சல்மானுல் பாரிஸ் நடிக்கிறார்.

மேலும், முக்கிய பாத்திரங்களில் காயத்ரி ஜெயராம், சச்சு, காத்தாடி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Advertisement

Advertisement

கடந்தாண்டு ஏப். 7 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஆடுகளம் தொடர் இரவு நேரத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, பின்னர் நான் பிரைம் எனப்படும் மதிய நேரத்துக்கு மாற்றப்பட்டது.

பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வந்த ஆடுகளம் தொடர், மதிய நேர ஸ்லாட்டுக்கு மாற்றப்பட்டதில் அதில் நடித்த நடிகர்கள் சிலர் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சூழலில், ஆடுகளம் தொடரை முடிக்க தொடர் குழு முடிவெடுத்துள்ளது. அதன்படி இந்தத் தொடர் வரும் ஜூலை 18 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில், ஆடுகளம் தொடர் கிளைமேக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.

summary

Filming for the serial Aadukalam, currently airing on Sun TV, has concluded.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments