திரையரங்க டிக்கெட் விலையை ரூ. 300 ஆக உயர்த்தக் கோரிக்கை!
டிக்கெட் விலையை உயர்த்த கோரிக்கை...
திரையரங்க உரிமையாளர்கள் குழு டிக்கெட் விலையை அதிகப்படுத்துவதற்கான கோரிக்கையை வைத்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருந்து தற்போது தமிழக முதல்வராகவும் பொறுப்பேற்றுள்ள விஜய், திரைத்துறையில் மாற்றங்களைச் செய்வார் என அவரிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக ராஜ்மோகன் நியமிக்கப்பட்ட பிறகு, தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள் ஆகியோர் மரியாதை நிமித்தமான அமைச்சர் ராஜ்மோகனைச் சந்தித்து திரைத்துறை சார்ந்த ஆலோசனைகளையும் பகிர்ந்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இன்று சென்னையைச் சேர்ந்த சில திரையரங்க உரிமையாளர்கள் அமைச்சர் ராஜ்மோகனைச் சந்தித்து, 24 மணி நேரமும் திரையரங்கங்கள் செயல்பட அனுமதி வழங்க வேண்டும் என்றும் சாதாரண திரையரங்குகளின் டிக்கெட் கட்டணங்களை ரூ. 190-லிருந்து ரூ. 300 ஆகவும் பிஎல்எக்ஸ், ஐமேக்ஸ் திரைகளுக்கு ரூ. 500 ஆக கட்டணங்களை அதிகரிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், திரையரங்குகளில் வெளியான பின்பு 8 வாரங்கள் கழித்தே ஓடிடியில் திரைப்படங்கள் வெளியாவதைக் கட்டாயமாக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
A group of theater owners has submitted a request to increase ticket prices.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.