தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலித்த கருப்பு!
கருப்பு திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலித்தது குறித்து...
கருப்பு திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடி வசூலித்ததாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த மே 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.
ஆரம்பம் முதலே உயர்ந்துகொண்டு இருக்கும் இந்தப் படத்தின் வசூல் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 100 கோடியை எட்டியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே, உலகளவில் படத்தின் வசூல் ரூ. 207 கோடியைக் கடந்ததாகவும் படக்குழு அறிவித்திருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இந்த திரைப்படம் விரைவில் ரூ. 300 கோடியைக் கடந்து, சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகச்சிறந்த வசூல்செய்த திரைப்படமாக இந்தப் படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், விடுமுறை நாள்கள் மட்டுமல்லாமல் வேலை நாள்களிலும் இந்தப் படத்தைப் பார்க்க மக்கள் ஆர்வம்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.