நியூஸ் ரீல்

தள்ளிப்போன ஸ்பைடர் வெளியீடு

DIN

மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி வரும் ஸ்பைடர் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். தெலுங்கில் உருவாகி வரும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பரத், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்து வரும் படத்தை என்.வி.பிரசாத் மற்றும் தாகூர் மது தயாரித்து வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. ஜூன் 23-ஆம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டு, படப்பிடிப்பு முடிவடையாத காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஏ.ஆர்.முருகதாஸ்.... "ஸ்பைடர் படப்பிடிப்பு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கிறது..' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT