நடிகை ரேவதி இயக்கும் புதிய படம்!
எண்பதுகளின் தொடக்கத்தில் நாடு முழுவதும் பேசப்பட்ட விவாதிக்கப்பட்ட பிரபல இயக்குநர் மகேஷ் பட்டின் ஹிந்திப் படமான 'அர்த்' மீண்டும் தயாராகிறது.
எண்பதுகளின் தொடக்கத்தில் நாடு முழுவதும் பேசப்பட்ட விவாதிக்கப்பட்ட பிரபல இயக்குநர் மகேஷ் பட்டின் இந்திப் படமான 'அர்த்' மீண்டும் தயாராகிறது. படத்தில் இரண்டு நாயகிகள். ஸ்மிதா பாட்டில், ஷபானா ஆஸ்மி.
இந்தியில் மீண்டும் உருவாகும் இந்தப் படத்தை இயக்குபவர் நடிகையும் இயக்குநரும் தயாரிப்பாளருமான ரேவதி. தமிழில் 'மறுபடியும்' என்ற பெயரில் இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கத்தில் 'அர்த்' தயாரானது அதில் ஒரிஜினல் படத்தில் ஷபானா ஆஸ்மியின் பாத்திரத்தில் ரேவதி நடித்திருந்தார். மறுபடியும் புதிதாக தயாராகும் ஹிந்தி "அர்த்' படத்தில் ஷபானாவின் பாத்திரத்தில் நடிப்பவர் ஸ்வர பாஸ்கர். ஸ்மிதா பாத்திரத்தில் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் நடிக்கிறார்.
- ரய்யான்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.