முகப்பு
இந்தியா

ஒடிசாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் குளறுபடிகள்: பிஜு ஜனதா தளம் குற்றச்சாட்டு

ஒடிசாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் குளறுபடிகள் நடந்துள்ளதாக பிஜு ஜனதா தளம் குற்றச்சாட்டியிருப்பது தொடர்பாக...

Updated On : 6 ஜூலை 2026, 10:39 am IST
பிஜு ஜனதா தளம் துணைத் தலைவர் தேபி பிரசாத் மிஸ்ரா - கோப்புப்படம்
பகிர்:

புவனேஸ்வர் (ஒடிசா): ஒடிசாவில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது (எஸ்ஐஆர்), ​​20 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பிஜு ஜனதா தளம் கவலை தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பெயர்கள் நீக்கப்பட்டிருப்பது மிகுந்த கவலை அளிப்பதாக பிஜு ஜனதா தளம் துணைத் தலைவர் தேபி பிரசாத் மிஸ்ரா செய்தியாளர்களுடன் பேசுகையில் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமை, அட்டவணையின்படி, ஆரம்பக்கட்ட சிறப்பு தீவிர திருத்தப் பணிக்குப் (எஸ்ஐஆர்) பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது என்று மிஸ்ரா கூறினார். "இதற்கு முன்னதாகவே, 20 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என்பதைக் காட்டும் தரவுகள் குறித்து ஒடிசாவின் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் நாங்கள் தெரிவித்திருந்தோம்.

Advertisement

Advertisement

எதிர்க்கட்சியான பிஜு ஜனதா தளம், பல்வேறு பகுதிகளில் உள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டியும், இந்த விவகாரத்தில் உள்ள குறைபாடுகள் குறித்த விரிவான விவரங்களை அளித்தது. பிஜு ஜனதா தளம் தகவலின்படி, 49 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 50,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன; மேலும் 46 தொகுதிகளில் தலா 10,000-க்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இறப்பு, நிரந்தரக் குடியிருப்பு மாற்றம் அல்லது ஒரே பெயர் பலமுறை இடம்பெற்றிருத்தல் போன்ற காரணங்களால், வரைவுப் பட்டியலில் சுமார் 20.14 லட்சம் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுள்ளன. இவற்றில் 8.32 லட்சம் பேர் இறந்தவர்கள், 10.07 லட்சம் பேர் வேறு இடங்களுக்குக் குடிபெயர்ந்தவர்கள் அல்லது கணக்கெடுப்பின்போது வராதவர்கள், 1.58 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்யப்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதை தலைமைத் தேர்தல் அதிகாரியின் அதிகாரப்பூர்வ தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. இந்தக் கணக்கெடுப்பில் சுமார் 14,000 வாக்காளர்கள் தங்களது கணக்கெடுப்புப் படிவங்களை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் திருப்பித் தரவில்லை என கூறப்படுகிறது.

திருத்தங்களை மேற்கொள்ள பிஜு ஜனதா தளம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், மீண்டும் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தப்பட்ட 'கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை' தொடர்ந்து "வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத வாக்காளர்கள், தங்களது கோரிக்கை அல்லது ஆட்சேபனையை வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலமாகவோ, 'படிவம் 6'-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பித்தோ, மொபைல் செயலி மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மேலும், ஜூலை 5 முதல் ஆகஸ்ட் 4 வரை வரைவுப் பட்டியல் தொடர்பான அனைத்து கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் முழுமையாகச் சரிபார்க்கப்படும். பின்னர், 147 தேர்தல் பதிவு அலுவலர்கள் மற்றும் 994 உதவி தேர்தல் பதிவு அலுவலர்கள் செப்டம்பர் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை ஆய்வு செய்வார்கள்.

அதன் பின்னர், ஒடிசா மாநிலத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியல் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.

summary

alleging that the names of over 20 lakh voters have been excluded from the list during the ongoing Special Intensive Revision (SIR) process.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments