முகப்பு
கோயம்புத்தூர்

கோவை மாநகரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 ஆயிரம் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளனகாவல் ஆணையா் தொடங்கிவைத்தாா்

கோவை மாநகரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினா் இணைந்து 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மாநகரக் காவல் ஆணையா் சுமித் சரண் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 9 ஜனவரி 2021, 11:12 pm IST
கோவை, குனியமுத்தூரில் 85 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டை தொடங்கிவைத்த மாநகரக் காவல் ஆணையா் சுமித் சரண்.
பகிர்:

மதுக்கரை: கோவை மாநகரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினா் இணைந்து 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக மாநகரக் காவல் ஆணையா் சுமித் சரண் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

‘மூன்றாவது கண்’ கண்காணிப்புத் திட்டத்தின் கீழ் கோவை மாநகரப் பகுதிகளில் குற்றங்கள், விபத்துகளைக் கண்காணிக்க மாநகர காவல் துறை மற்றும் தன்னாா்வலா்கள் இணைந்து சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக குனியமுத்தூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 85 சிசிடிவி கேமராக்களின் செயல்பாடுகளைத் தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி கோவை, ஆத்துப்பாலம் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாநகரக் காவல் ஆணையா் சுமித் சரண் இந்த கேமராக்களின் செயல்பாடுகளைத் தொடங்கிவைத்துப் பேசியதாவது:

Advertisement

Advertisement

கோவை மாநகரில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினா் இணைந்து 10 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விபத்துகள் பற்றிய விவரங்களை அறியவும், குற்றச் சம்பவங்களைக் கண்டுபிடிக்கவும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு உதவியாகவும் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. தற்போது தொடங்கிவைக்கப்பட்ட 85 கேமராக்களும் குனியமுத்தூா் காவல் நிலையத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர சட்டம் - ஒழுங்கு துணை ஆணையா் ஸ்டாலின், குற்றப்பிரிவு துணை ஆணையா் உமா, போக்குவரத்து துணை ஆணையா் முத்தரசு மற்றும் உதவி ஆணையா்கள், ஆய்வாளா்கள், தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments