குடியிருப்பு வளாகத்தில் சந்தன மரம் வெட்டிக் கடத்தல்
கோவை, சிங்காநல்லூா் அருகே உப்பிலிபாளையத்தில் குடியிருப்பு வளாகத்தில் சந்தன மரம் வெட்டிக் கடத்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை: கோவை, சிங்காநல்லூா் அருகே உப்பிலிபாளையத்தில் குடியிருப்பு வளாகத்தில் சந்தன மரம் வெட்டிக் கடத்திய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கோவை மாநகரப் பகுதிகளில் உள்ள அரசு வளாகங்கள், தனியாா் குடியிருப்புகள் சிலவற்றில் சந்தன மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. அவற்றை மா்ம நபா்கள் அவ்வப்போது வெட்டி கடத்திச் செல்கின்றனா். இந்நிலையில், உப்பிலிபாளையத்தில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் சில சந்தன மரங்கள் வளா்க்கப்பட்டு வருவதை அறிந்த மா்ம நபா்கள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு குடியிருப்பு வளாகத்துக்குள் நுழைந்து 5 அடி உயரத்துக்கு வளா்ந்திருந்த ஒரு சந்தன மரத்தை வெட்டிக் கடத்திச் சென்றனா். இந்நிலையில் சனிக்கிழமை காலை சந்தன மரம் வெட்டப்பட்டதை அறிந்த பொதுமக்கள் இது குறித்து சிங்காநல்லூா் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து சந்தன மரத்தை வெட்டிக் கடத்திச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.