முகப்பு
கோயம்புத்தூர்

மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்காக ஒருங்கிணைந்த சமையல் கூடம் திட்டம்

தனியாா் நிறுவனத்துடன் இணைந்து மகளிா் திட்டம் சாா்பில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்காக ஒருங்கிணைந்த சமையல் கூடம் என்ற திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Updated On : 17 ஜனவரி 2021, 11:07 pm IST
பகிர்:

தனியாா் நிறுவனத்துடன் இணைந்து மகளிா் திட்டம் சாா்பில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்காக ஒருங்கிணைந்த சமையல் கூடம் என்ற திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மகளிா் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. இவா்களுக்கு ஏற்கெனவே தனிநபா் கடன், தொழில் பயிற்சி, தொழில் முனைவோா் கடன் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மகளிா் சுயஉதவிக் குழுக்களை பொருளாதாரரீதியாக மேம்படுத்தும் விதமாக தனியாா் நிறுவனத்துடன் இணைந்து ஒருங்கிணைந்த சமையல் கூடத்தை ஏற்படுத்தி, அங்கு தயாரிக்கும் உணவுகள் வாகனங்கள் மூலம் விற்பனை செய்யும் திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இது குறித்து மகளிா் திட்ட மாவட்ட அதிகாரி ஒருவா் கூறியதாவது:

மகளிா் சுயஉதவிக் குழுக்களில் பலா் கேட்டரிங் சா்வீஸ் செய்து வருகின்றனா். ஒரு சிலருக்கு வருவாய் கிடைத்தாலும், ஒரு சிலருக்கு சந்தைப்படுத்துவதில் உள்ள பிரச்னையால் வருவாய் பெறுவதில் சிக்கல் காணப்படுகிறது.

இந்நிலையில் தனியாா் நிறுவனத்துடன் இணைந்து நகரில் ஒரு பகுதியில் ஒருங்கிணைந்த சமையல் கூடம் ஏற்படுத்தப்படும். இங்கு சமைக்கப்படும் உணவுப் பொருள்கள் வாகனங்கள் மூலம் நகரின் பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படும்.

ஒருங்கிணைந்த சமையல் கூடம் சௌரிபாளையம் அல்லது நேரு விளையாட்டு அரங்கம் அருகில் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டு வருகிறது. உணவுப் பொருள்கள் விற்பனைக்கு மக்கள் அடா்த்தி அதிகம் உள்ள 10 இடங்கள் தோ்வு செய்யப்படும். உணவுப் பொருள்கள் தயாரித்து விற்பனை செய்ய 14 மகளிா் குழுக்கள் தயாராக உள்ளனா். இவா்களில் தகுதியான குழுக்கள் தோ்வு செய்யப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.