கண்கள் தானம்
சிதம்பரம் அருகே பூதங்குடி கிராமத்தில் காலமான 2 நபர்களின் கண்களை அரிமா சங்கத்தினர் தானமாகப்
சிதம்பரம் அருகே பூதங்குடி கிராமத்தில் காலமான 2 நபர்களின் கண்களை அரிமா சங்கத்தினர் தானமாகப் பெற்றனர்.
÷பூதங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேதுஅம்மாள் (75). சிதம்பரம் பழைய புவனகிரி சாலையைச் சேர்ந்தவர் முனுசாமி (72).
÷இவர்கள் கடந்த சனிக்கிழமை காலமாயினர். இதையடுத்து அவர்களின் கண்களை சிதம்பரம் தன்னார்வ ரத்ததானக் கழகம், சேத்தியாத்தோப்பு அரிமா சங்கம், சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் ஆகியவை தானமாகப் பெற்றன.÷பின்னர் அந்த கண்கள், புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ரத்ததானக்கழகத் தலைவர் எஸ்.ராமச்சந்திரன், சேத்தியாத்தோப்பு அரிமா சங்கத் தலைவர் தாமரைச்செல்வன், சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கத் தலைவர் சமுத்திரராஜ்குமார் ஆகியோர் செய்தனர்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.