முகப்பு
கடலூர்

திருவதிகை கோயில் மண்டபத்தை புதுப்பிக்கக் கோரிக்கை

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் மண்டபத்தை புதுப்பிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:22 am IST
பகிர்:

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் மண்டபத்தை புதுப்பிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

÷இக்கட்சியின் இளைஞரணிக் கலந்தாய்வுக் கூட்டம் அங்குசெட்டிப்பாளையம் திரெüபதியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்றது.

÷கூட்டத்துக்கு நகர இளைஞரணித் தலைவர் எம்.அன்பு தலைமை வகித்தார்.

Advertisement

Advertisement

÷மாவட்ட இளைஞரணி பொதுச்செயலர் ஆர்.எஸ்.கே.தேவா, ஒன்றியத் தலைவர் டி.முத்துக்குமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

÷ஒன்றியச் செயலர் வி.சுந்தரமூர்த்தி, அமைப்பாளர் எஸ்.லட்சுமணன் வரவேற்றனர்.

÷நிர்வாகிகள் திருப்பதி, சுப்பிரமணி, பழனிமுருகன், துரைக்கண்ணு, சதாசிவம் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

தீர்மானங்கள்:

÷விநாயகர் சதூர்த்தியையொட்டி இந்து மக்கள் கட்சி சார்பில் 20 இடங்களில் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும்.

÷கும்பகோணம் சாலையில் ராமலிங்கர் அன்னதான மடம் அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.

÷திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் மழைக்காலங்களில் கசிவு ஏற்படுகிறது. இதனால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, மண்டபத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இதில் நிறைவேற்றப்பட்டன.

÷நிர்வாகி ஜெ.சத்தியராஜ் நன்றிக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments