முகப்பு
கடலூர்

மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

கடலூர் மாவட்டத்தில் மாணவர்களின் கல்வித் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ.

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:22 am IST
பகிர்:

கடலூர் மாவட்டத்தில் மாணவர்களின் கல்வித் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என சிதம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

÷சிதம்பரம் அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

÷விழாவில் பங்கேற்ற சிதம்பரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாணவியருக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.

Advertisement

Advertisement

அவர் பேசியது:

÷பல்வேறு கல்வி நிலையங்களைத் தோற்றுவித்த சுவாமி சகஜானந்தருக்கு, சிதம்பரத்தில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் நான் கோரிக்கை விடுத்தேன்.

÷அக்கோரிக்கையை ஏற்று, மணி மண்டபம் அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். விரைவில் சிதம்பரத்தில் மணி மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டப்படும்.

÷தமிழகத்தைப் பொறுத்தவரை, பொதுத்தேர்வுகளின் கல்வித் தேர்ச்சி விகிதத்தில் கன்னியாகுமரி, கோவை மாவட்டங்களே முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கின்றன.

÷அம்மாவட்டங்களுக்கு அரசு அளிக்கும் அதே சலுகைகளைத்தான் கடலூர் மாவட்டத்துக்கும் வழங்குகிறது. ஆனால், கடலூர் மாவட்டம் கல்வித் தேர்ச்சியில் 31-வது இடத்தில் உள்ளது. இது மிகவும் வேதனைக்குரியது.

÷எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், சமூகஆர்வலர்கள் என அனைவரும் ஒருங்கிணைந்து, மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

 ÷விழாவுக்கு தலைமை ஆசிரியர் ஜி.அனந்தகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஆசிரியர் சங்கச் செயலர் பி.ராஜசேகரன் வரவேற்றார்.

÷நகரத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர், கல்விக்குழு உறுப்பினர் டி.ஜெயராமன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர் ஏ.கலியமூர்த்தி, ஆசிரியை மாலா உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

÷உதவித் தலைமை ஆசிரியை டி.வத்சலா நன்றிக் கூறினார்.

÷இதன் பின்னர், நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வல்லத்துறை அரசு மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினிகளை எம்.எல்.ஏ. கே.பாலகிருஷ்ணன் வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments