முகப்பு
கடலூர்

மானிய விலையில் விதைகள் விநியோகம்

நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் மானிய விலையில் விதைகள் விநியோகம்

Updated On : 22 ஆகஸ்ட் 2013, 11:08 am IST
பகிர்:

நடப்பு சம்பா பருவத்தில் வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்படுகிறது.

÷இது குறித்து பரங்கிப்பேட்டை வட்டார வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

÷நடப்பு சம்பா பருவத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் பி.பி.டி. 5204, இஞ(த)-50, இஞ-43 ஆகிய ரகங்கள் ஒரு கிலோவிற்கு ரூ.5 என மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

÷பரங்கிப்பேட்டை, பின்னத்தூர், சிதம்பரம் ஆகிய வேளாண் விரிவாக்க மையங்கள் மூலம் இந்த விதைகளை மானிய விலையில் பெற்று பயனடையலாம்.

÷தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலமாக பி.பி.டி. 5204 சான்று நிலை விதைகள், ஒரு கிலோவுக்கு ரூ.5 மானியமாக வேளாண்துறை மூலம் அனுமதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

÷பரங்கிப்பேட்டை வட்டாரத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் பி.பி.டி. 5204 விதைகள் 51 மெட்ரிக் டன் இருப்பு வைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments