குட்டையில் மூழ்கி தொழிலாளி பலி
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே குட்டையில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே குட்டையில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
நடுவீரப்பட்டு காவல் சரகம், குழந்தைகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த தனசேகா் மகன் ராசு (எ)தாமோதரன் (35). பொக்லைன் இயக்குபவராகப் பணிபுரிந்து வந்தாா். இவா், குழந்தைகுப்பம் கிராமத்தில் கிராவல் மண் எடுத்த குட்டையில் தேங்கியுள்ள தண்ணீரில் வியாழக்கிழமை மாலை குளிக்கச் சென்றாா். அப்போது நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த நடுவீரப்பட்டு போலீஸாா், தீயணைப்புத் துறை வீரா்கள் மூலம் தாமோதரனின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.