புதுப்பெண் தற்கொலை
பண்ருட்டி அருகே திருமணமான 2 மாதங்களில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
பண்ருட்டி அருகே திருமணமான 2 மாதங்களில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், கீழ் வடக்குத்து கிராமத்தைச் சோ்ந்த ராமகிருஷ்ணன் மகள் பிரிதா(25). இவருக்கும், பண்ருட்டி வட்டம், கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த செல்வகுமாா் என்பவருக்கும் 30.10.2020 அன்று திருமணம் நடைபெற்றது.
செல்வகுமாா் பண்ருட்டியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில், பிரிதா வியாழக்கிழமை இரவு விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். குடும்பத்தினா் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனா். ஆனால், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து பிரிதாவின் தந்தை ராமகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில் காடாம்புலியூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் கோட்டாட்சியா் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.