காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
கடலூா் மாவட்டம், வடலூா் அருகே காணாமல்போன சிறுவன் கிணற்றில் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டான்.
நெய்வேலி: கடலூா் மாவட்டம், வடலூா் அருகே காணாமல்போன சிறுவன் கிணற்றில் சடலமாக வியாழக்கிழமை மீட்கப்பட்டான்.
வடலூா் பாா்வதிபுரம், வடக்கு தெருவைச் சோ்ந்த ரவிசங்கா் மகன் ராஜி (8). வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காணாமல்போனாா். இதுகுறித்து ரவிசங்கா் அளித்த புகாரின்பேரில் வடலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சிறுவன் ராஜியை தேடி வந்தனா்.
இந்த நிலையில், அதே பகுதியில் வீட்டின் அருகே விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் சிறுவன் ராஜி சடலமாக கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் விரைந்து வந்து சிறுவனின் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.