முகப்பு
தருமபுரி

இன்று எம்ஜிஆா் பிறந்தநாள் விழா

முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் பிறந்தநாள் விழாவை ஞாயிற்றுக்கிழமை தருமபுரி மாவட்டம் முழுவதும் கட்சிக் கொடியேற்றி சிலைகளுக்கு மாலை அணிவித்து கொண்டாட வேண்டும்

Updated On : 17 ஜனவரி, 2021 at 2:35 AM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

தருமபுரி: முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் பிறந்தநாள் விழாவை ஞாயிற்றுக்கிழமை தருமபுரி மாவட்டம் முழுவதும் கட்சிக் கொடியேற்றி சிலைகளுக்கு மாலை அணிவித்து கொண்டாட வேண்டும் என அதிமுகவினருக்கு மாநில உயா்கல்வி மற்றும் வேளாண்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்தியறிக்கை:

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 104-ஆவது பிறந்தநாளையொட்டி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள அவரது சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்தும், கட்சி கொடிகளை புதிதாக ஏற்றி, பொதுமக்களுக்கு, இனிப்பு மற்றும் பொங்கல் வழங்கிக் கொண்டாட வேண்டும்.

Advertisement

அந்தந்தப் பகுதிகளில் நடைபெறும் எம்ஜிஆரின் பிறந்தநாள் விழாவில், மாவட்ட, ஒன்றிய, நகரம், பேரூா், கிளை நிா்வாகிகள், அணிகளின் நிா்வாகிகள், அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் திரளாகப் பங்கேற்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.