ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் குழந்தைகள் தின விழா
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை
கல்விஊராட்சி ஒன்றியப் பள்ளியில் குழந்தைகள் தின விழா
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம்-ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பாலமுருகன் மற்றும் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஜான்சேவியர்ராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் முன்னிலை வகித்தார். ஆசிரியை ச.பொன்மலர் வரவேற்றார். ஆசிரியை ரெங்கலதா வாழ்த்துரை வழங்கினார்.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவ மாணவியர் நேரு குறித்த 54 கலை நிகழ்ச்சிகள் ஆங்கிலம் மற்றும் தமிழில் நடத்திக்காட்டினர். மேலும் குழந்தைகள் தினத்திற்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.
சிவகாசி மற்றும் சென்னையில் உள்ள எல்.வி.ஆர். கல்விக் குழுமத்தின் தலைவர் எல்.வி.ராதாகிருஷ்ணன், குழந்தைகள் தினம் குறித்து சிறப்புரையாற்றி, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியைகள் ரெங்கலதா, பொன்மலர், ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் கிராம கல்விக் குழுத் தலைவி சீத்தாலட்சுமி, பள்ளிக் கல்விக் குழுத் தலைவி கனியம்மாள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.