கல்வி

ஜப்பானில் உயர்கல்வி பயில வருகை தரும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்'

DIN

ஜப்பானில் உயர்கல்வி பயில வரும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என ஜப்பான் டோக்கியோ பல்கலைக்கழக இயக்குநர் ஹிரோஷி யோசினோ கூறினார்.
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகமும்,ஜப்பான் டோக்கியோ பல்கலைக்கழகமும் இணைந்து வியாழக்கிழமை நடத்திய ஜப்பான் உயர்கல்விக் கண்காட்சி தொடக்கவிழாவில் அவர் மேலும் பேசியது:
ஜப்பானில் உள்ள 770 பல்கலைக்கழகங்களில் உயர்கல்வி பயில வரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அங்கு உயர்கல்வி பயின்று வரும் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் வெளிநாட்டு மாணவர்களில் 90 ஆயிரம் பேர் சீன மாணவர்கள். 140 ஆண்டு பழமையான டோக்கியோ பல்கலைக்கழகத்தில் சீனா, கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 34 ஆயிரம் மாணவர்கள் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.
ஆனால் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில் உள்ளது. மொழி மற்றும் வேலைவாய்ப்பு பிரச்னைதான் காரணம் என்று கண்டறியப்பட்டு,உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆங்கில மொழியில் பொறியியல்,தகவல் தொழில்நுட்பம்,ஆராய்ச்சிப் படிப்புகள் படிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஜப்பான் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து உயர்கல்வி படிக்க வருகை தரும் மாணவர்களுக்கு ஜப்பான் அரசு கல்வி உதவித் தொகை வழங்கி ஊக்குவிக்கிறது.
இந்திய மாணவர்கள் ஜப்பான் பல்கலைக்கழகங்களில் சேர்ந்து உயர்கல்வி,ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் இரு நாடுகளின் மனிதவள அறிவாற்றல் மேம்பட வாய்ப்புள்ளது.
எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் டோக்கியோ பல்கலைக்கழகம், சிசுகா பல்கலைக்கழகம், வசிடா பல்கலைக்கழகத்துடன் மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் கடந்த 10 ஆண்டுகளில் 80 க்கும் மேற்பட்ட மாணவர்கள்,பேராசிரியர்கள் பயனடைந்துள்ளனர் என்றார் அவர்.
இதில், ஜப்பான் ரிட்ஸ்மிகான் பல்கலைக்கழகம், சிசுகா பல்கலைக்கழகம் ஆராய்ச்சித்துறை பேராசிரியர் யசுரோ கயாகவா, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகப் பதிவாளர் என்.சேதுராமன்,இயக்குநர் முத்தமிழ் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு கோடை விடுமுறை!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொடூர தாக்குதல்!

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT