கல்வி

கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: ஜூலை 19 இல் கலந்தாய்வு

DIN

*முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவியர்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. முதல் மூன்று இடங்களை மாணவிகளே பிடித்துள்ளனர்.
இந்தப் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி மற்றும் ஏவி) படிப்புக்கு 320 இடங்கள், உணவுத் தொழில்நுட்பப் பட்டப் படிப்புக்கு 20 இடங்கள், கோழியின தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு 20 இடங்கள், பால்வளத் தொழில்நுட்பப் பட்டப் படிப்புக்கு 20 இடங்கள் என மொத்தம் 380 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் இந்தப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதால் கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 5 ஆயிரம் பேர் அதிகமாக விண்ணப்பித்திருந்தனர்.
இந்தப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை 23,021 பேர் இணையதளத்தில் பதிவு செய்தனர். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 21,339 பேர் சமர்ப்பித்திருந்தனர்.
கால்நடை மருத்துவப் படிப்புக்கு 15,520 பேர், உணவு தொழில்நுட்பப் படிப்புக்கு 2,347 பேர், கோழியின தொழில்நுட்பப் படிப்புக்கு 1,094 பேர், பால்வளத் தொழில்நுட்பப் படிப்புக்கு 1,866 பேர் என மொத்தம் 20,827 பேருக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தகுதி பெற்றோரில் 9,520 பேர் முதல் தலைமுறை பட்டதாரி விண்ணப்பதாரர்கள் ஆவர்.
தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்.எஸ்.கிருத்திகா, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பி.செளமியா, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.என்.ஆர்த்தி ஆகியோர் முதல் மூன்று இடங்களைப் பெற்றுள்ளனர்.
திட்டமிட்டபடி கலந்தாய்வு: இந்தப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 19, 20, 21 தேதிகளில் நடைபெறவுள்ளது. மருத்துவக் கலந்தாய்வில் தாமதம் ஏற்பட்டால் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான தேதியிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.திலகர் சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
ஏற்கெனவே அறிவித்த தேதியில் கலந்தாய்வை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். எம்.பி.பி.எஸ். படிப்பில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு தேதியில் மாற்றம் ஏற்பட்டால் கால்நடை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தேதியும் மாற்றப்படும். இரண்டு படிப்புகளுக்கும் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வை நடத்தினால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்படும்.
இந்த ஆண்டு முதல் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT