கல்வி

ராமகிருஷ்ணா மிஷன் இல்லத்தில் இலவச கல்வி: ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு

DIN

பெற்றோரை இழந்த ஏழை மாணவர்கள் பள்ளி, பட்டயப் படிப்புகளில் (டிப்ளமோ) சேர்ந்து இலவசமாக கல்வி பெற தொடர்பு கொள்ளலாம் என சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த இல்லம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மிஷன் இல்லத்தில் 2017 -2018 -ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பெற்றோரை (தாய் அல்லது தந்தை) இழந்து, வறுமையில் வாடும் மாணவர்கள் (ஆண்கள் மட்டும்) இலவச படிப்பு, தங்குமிடத்துடன் தங்களது படிப்பை தொடர, ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் ஏற்பாடு செய்துள்ளது.
ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் 6 -ஆம் வகுப்பில் ராமகிருஷ்ண மிஷன் உறைவிட உயர்நிலைப் பள்ளியில் தொடரலாம். குறைந்தபட்சம் 70 சதவீத மதிப்பெண் பெற்று பத்தாம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், கணினி ஆகிய பிரிவுகளில் முதலாமாண்டு பட்டயப் படிப்பில் சேரலாம். கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டு பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இரண்டாமாண்டு (லேட்டரல் என்ட்ரி) பட்டயப் படிப்பில் சேரலாம்.
இதுகுறித்து மேலும் தகவல்களை பெற செயலர், ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம், எண் 66, சர் பி.எஸ்.சிவசாமி சாலை, மயிலாப்பூர், சென்னை -4 என்ற முகவரியிலும், 044-2499 0264, 4210 7550 ஆகிய தொலைபேசி எண்களும் பெறலாம். இதுதொடர்பாக chennai.studentshome@rkmm.org என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத் தொழிலாளி கொலை வழக்கில் மனைவி உள்பட இருவா் கைது

மாணவா்கள் சாதனையாளா்களாக உருவாக வேண்டும்: பாவை திறனறித் தோ்வு பரிசளிப்பு விழாவில் பேச்சு

கொல்லிமலை, மோகனூரில் இடி, மின்னலுடன் பரவலாக மழை மழை

ராஜ வாய்க்காலில் இருந்து உயிா்நீா் திறந்துவிட விவசாயிகள் கோரிக்கை

சித்திரை மாத பிரதோஷ வழிபாடு

SCROLL FOR NEXT