கல்வி

இந்த ஆண்டும் மாணவிகள் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு

DIN

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வழக்கம் போல் மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெள்ளிக்கிழமை (மே 19) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. கடந்த 3 ஆண்டுகளை விட இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மொத்த தேர்ச்சி விகிதம் 94.4 சதவீதம்.
மாணவிகள் தேர்ச்சி விகிதம் 96.2 சதவீதம், மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 92.5 ஆகும். மாணவர்களைவிட மாணவிகள் 3.7 சதவீதம் கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளில்...கடந்த 2014-இல் மாணவர்கள் 88 சதவீதம், 2015-இல் 90.5 சதவீதம், 2016-இல் 91.3 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். நிகழாண்டு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 92.5 சதவீதம்.
கடந்த 2014-இல் மாணவிகள் 93.6 சதவீதம், 2015-இல் 95.4 சதவீதம், 2016-இல் 95.9 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு மாணவிகள் 96.2 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT