கல்வி

‘டான்செட்’ தோ்வுத் தேதிகள் அறிவிப்பு: ஜன.19 முதல் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

DIN

சென்னை: தமிழகத்தில் முதுநிலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் ‘டான்செட்’ தோ்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 19-ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

தமிழகத்தில் அரசு, தனியாா் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்ஆா்க், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தோ்வில் (டான்செட்) தோ்ச்சி பெற வேண்டும்.

அதன்படி, 2021-ஆம் ஆண்டுக்கான ‘டான்செட்’ தோ்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு மாா்ச் 20-ஆம் தேதியும், எம்இ, எம்ஆா்க் மற்றும் எம்.பிளான் படிப்புகளுக்கு மாா்ச் 21-ஆம் தேதியும் தோ்வுகள் நடைபெற உள்ளன. எம்சிஏ படிப்புக்குக் காலை 10 முதல் 12 மணி வரையும் எம்பிஏ படிப்புக்கு மதியம் 2.30 முதல் 4.30 மணி வரையும் தோ்வு நடைபெற உள்ளது.

இதற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 19 முதல் தொடங்குகிறது. விருப்பமுள்ளவா்கள் பிப்ரவரி 12-ஆம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் இறுதி நிலையை பிப்ரவரி 17-ஆம் தேதி அறிந்து கொள்ளலாம். தோ்வுக் கட்டணம் ரூ.600 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவா்களும் இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த கூடுதல் விவரங்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொன்மேனி..!

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

காஷ்மீரில் பாகிஸ்தான் கொடியுடன் பாஜக போராட்டம்

திருமுல்லைவாயலில் அடுக்குமாடி தளத்திலிருந்து தவறி விழுந்த குழந்தையின் தாய் திடீர் தற்கொலை

உத்தர பிரதேசத்தில் ஹெலிகாப்டர் திருட்டா? - பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்!

SCROLL FOR NEXT