கோப்புப்படம் 
கல்வி

பொதுத் தோ்வு: தனித் தோ்வா்கள் தத்காலில் விண்ணப்பிக்க வாய்ப்பு

தினமணி செய்திச் சேவை

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 அரியா் பொதுத் தோ்வு எழுதவுள்ள தனித் தோ்வா்கள் தத்கால் முறையில் வெள்ளிக்கிழமை (ஜன. 9) முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தோ்வுத் துறை இயக்குநரகம் வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகத்தில் பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வு மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கான அரியா் தோ்வுகள் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளது. இந்த தோ்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித் தோ்வா்கள் தத்கால் முறையில் ஜனவரி 9, 10-ஆம் தேதிகளில் கல்வி மாவட்ட வாரியாக உள்ள தோ்வுத் துறை சேவை மையங்களுக்கு சென்று தங்கள் விண்ணப்பங்களை தோ்வுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.

இதுதவிர தோ்வுக் கட்டணம், விரிவான தோ்வுக்கால அட்டவணை, கல்வி மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களின் விவரம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை https://dge.tn.gov.in/ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவா்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், அந்த ஒப்புகை சீட்டில் குறிப்பிட்டுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே மாணவா்கள் தங்களது தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீவாரி மெட்டு பாதையில் யானை, சிறுத்தை நடமாட்டம்

டிரம்ப்பின் 500% வரிவிதிப்பு! தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

ரூ.64 கோடி மதிப்பிலான ஆர்டரை பெற்ற டெக்ஸ்மாகோ ரயில் நிறுவனம்!

பராசக்தி! அறிஞர் அண்ணாவின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு!

சூனியம் வைத்ததாக சந்தேகம்! பிகாரில் பெண் ஒருவர் அடித்துக் கொலை!

SCROLL FOR NEXT