வெளிநாடுகளில் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்கள், கல்வி உதவித் தொகையுடன் கோடைக்கால சிறப்பு படிப்புகளை வழங்கி வருகின்றன.
அந்த வகையில், ஆஸ்திரியாவில் உள்ள விபிசி சம்மர் ஸ்கூல் எனப்படும் வியன்னா பயோசென்டர் சம்மர் ஸ்கூல், 20 இளநிலை பட்டதாரிகளுக்கு கல்வி வாய்ப்பை வழங்குகிறது. கல்வியில் சிறந்த விளங்கும், ஆங்கில நிபுணத்துவம் கொண்ட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.1400 யூரோக்கள் உதவித் தொகையாக வழங்கப்படும். 9 வார படிப்புகள் வழங்கப்படுகிறது.
சுவிட்சர்லாந்தில் சிஇஆர்என் கோடைக்கால உதவித் தொகை படிப்பு
சுவிட்சர்லாந்தில் உள்ள சிஇஆர்என் கல்வி நிறுவனம் ஆண்டு தோறும் 341 அறிவியல் துறை மாணவர்களையும் 100 வெளிநாட்டு பொறியியல் மாணவர்களையும் அழைக்கிறது.
இங்கு இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
க்யோடோ பல்கலைக்கழகம், 2026ஆம் ஆண்டு கோடைக்கால சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு விண்ணப்பங்களை வெளியிட்டு வருகிறது.
அமெரிக்காவில் உள்ள ஆம்ஜென் அறக்கட்டளையால் நடத்தப்படும் ஆம்ஜென் ஸ்காலர்ஸ் திட்டம், உயிரி தொழில்நுட்பத்தில் அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கவும், இளங்கலை அறிவியல் கல்வியை மேம்படுத்தவும் நோக்கமாகக் கொண்டுள்ளது, குறிப்பாக ஆர்வமுள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு வாய்ப்பு வழங்குகிறது.
அமெரிக்காவில் ரிசர்ச் இன் இன்டஸ்டிரியல் புராஜக்ட் எனப்படும் ஆர்ஐபிஎஸ் திட்டத்தின் மூலம் உலக நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி வாய்ப்பு வழங்கப்படுகிறது.
அனைத்து செலவுகளும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க பிப். 10ஆம் தேதி கடைசி நாள். இதில் பங்கேற்க 18 வயது நிரம்பியிருக் வேண்டும்.
சிஇஆர்என் ஓபன் லேப் ஒவ்வொரு ஆண்டும் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கு கணினி அறிவியலில் 9 வார கோடைக்கால சிறப்பு வகுப்புகளை நடத்துகிறது. நீங்கள் பிஎஸ்சி அல்லது எம்எஸ்சி கணினி அறிவியல் மாணவராக இருந்தால் இந்த வாய்ப்பு உங்களுக்குத்தான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.