முகப்பு
செய்திகள் / கட்டுரைகள்

இப்படியுமா? சிபிஎஸ்இ கணித வினாத்தாள் க்யூஆர் குறியீட்டுடன் ஆங்கில பாடல் இணைப்பா?

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு கணித வினாத்தாள் க்யூஆர் குறியீட்டுடன் ஆங்கில பாடல் இணைக்கப்பட்டதாக வெளியாகும் தகவல்.

Updated On : 10 மார்ச், 2026 at 6:53 AM
சிபிஎஸ்இ கணித வினாத்தாள்
பகிர்:

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புக்கான கணிதப் பாட வினாத்தாளில் இடம்பெற்றிருந்த க்யூஆர் குறியீடு, பிரிட்டன் பாடகர் ரிக் ஆஸ்ட்லேவின் நெவர் கோன்ன கிவ் யு அப் என்ற ஆங்கிலப் பாடல் விடியோவுடன் இணைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்ச் 9ஆம் தேதி காலை சிபிஎஸ்சி கணிதப் பாடத்துக்கான தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்த ஒரு சில மணி நேரத்துக்கெல்லாம் அந்த வினாத்தாள் பற்றிய ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலானது. காரணம், ஒரு மாணவர், அந்த க்யூஆர் கோடை ஸ்கேன் செய்தபோது, 1987ஆம் ஆண்டு சூப்பர் டூப்பர் ஹிட் ஆன ஆங்கிலப் பாடல் ஒன்று இசைக்கப்பட்டது.

பொதுவாக, இந்த க்யூஆர் கோடுகள், வினாத்தாளின் அதிகாரப்பூர்வ தன்மை மற்றும் பாதுகாப்புக்காக உருவாக்கப்படுவது. ஆனால், அதில், எவ்வாறு ஒரு இசைப்பாடல் இணைக்கப்பட்டது என்றும், மாணவர் ஏதோ டிரிக் செய்து இவ்வாறு பதிவிட்டு சமூக வலைத்தளத்தில் மக்களை ஏமாற்றியிருக்கலாம் என்றும் கருத்துகள் பதிவிடப்பட்டுள்ளன.

அந்த விடியோவும் சமூக வலைத்தளத்தில் நேற்று வைரலான நிலையில், உண்மை நிலவரம் என்னவென்று இதுவரை உறுதி செய்யப்படவில்லை.

பலர் இதனை உண்மை என்று நம்பி விமர்சனங்களை பதிவிட்டாலும், சிலர், இதில் ஏதோ ஏமாற்று வேலை இருப்பதாகக் கூறுகிறார்கள்.

இந்த வினாத்தாளில் மட்டும்தான் இந்த குறைபாடா இல்லை அனைத்து வினாத்தாள்களிலும் இந்த குறைபாடு இருந்திருக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

முழு கட்டுரையைப் படிக்க →