10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? எப்படி அறிவது?
தமிழ்நாடு அரசுப் பாடத்திட்டத்தில் படித்து தேர்வெழுதியிருக்கும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எப்போது?
தமிழ்நாட்டில் அரசுப் பாடத்திட்டத்தின் கீழ் படித்து 10-ம் வகுப்பு தேர்வு எழுதியிருக்கும் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 20-ம் தேதி) வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜமோகன், பள்ளிகள் திறப்பு மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியீடு குறித்து அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் பள்ளிக்கல்வி துறை அமைச்சகர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, நடைபெற்று முடிந்த 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 20-ம் தேதி) வெளியிடப்படும்.
Advertisement
Advertisement
தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இந்த இணையதளங்களுக்குச் சென்று 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் என்பதை கிளிக் செய்து, அதில் மாணவர்களின் பதிவு எண், பிறந்த தேதி உள்ளிட்டவற்றை சரியாக பதிவிட்டு மதிப்பெண் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் 10ஆம் வகுப்புத் தேர்வு மார்ச் 10ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதி வெளியிடப்படவிருக்கிறது. கடந்த ஆண்டு மே 16ஆம் தேதியே தேர்வு முடிவுகள் வெளியாகியிருந்தன.
வரும் ஜூன் 1-ம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். பள்ளிகள் திறக்கப்படும் அன்று, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சீருடைகள் புத்தகங்கள் வழங்கப்படும் என தெரிவித்தார்,
When will the exam results for 10th grade students who have studied and appeared for the Tamil Nadu government syllabus be out?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.