10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! - நேரலை
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு செய்திகள் உடனுக்குடன் தினமணி.காம் உடன் இணைந்திருங்கள்..
தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அமைச்சர் ராஜ்மோகன்!
தேர்வு முடிவுகளை சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
வாட்ஸ்-அப்பில் தேர்வு முடிவுகள்!
இந்த ஆண்டு முதன்முறையாக வாட்ஸ்அப் மூலம் முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு “Hi” என்று குறுஞ்செய்தி அனுப்பினால் தேர்வு முடிவுகள் வாட்ஸ்-அப்பிற்கே வந்துவிடும்.
Advertisement
Advertisement
9 லட்சம் தேர்வர்கள்!
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மொத்தமாக 8,82,806 பள்ளி மாணவர்களும், 25,801 தனித்தேர்வர்களும், 395 சிறைவாசிகளும் எழுதியிருந்தனர்.
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின.
10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்.6 ஆம் தேதி வரை நடைபெற்றது.