ராகுல் காந்தியும் காங்கிரஸும் பாஜகவின் ‘பி-டீம்’ - மீண்டும் விமர்சித்த கேரள முதல்வர்!
ராகுல் காந்தியும் காங்கிரஸும் பாஜகவின் ‘பி-டீம்’ என கேரள முதல்வர் மீண்டும் விமர்சித்துள்ளது குறித்து...
ராகுல் காந்தியும் காங்கிரஸும் பாஜகவின் ‘பி-டீம்’ என கேரள முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் விமர்சித்துள்ளார்.
கேரளத்தில் வரும் ஏப். 9 ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இடதுசாரி ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.
இதனிடையே, மூன்றாவது முறையாக இடதுசாரி ஜனநாயக முன்னணி வெற்றி பெற்று பினராயி விஜயன் தன்னுடைய ஹாட்ரிக் வெற்றியை உறுதி செய்வாரா? என்றெல்லாம் விவாதங்கள் வலம் வருகின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், காங்கிரஸ் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், “ராகுல் காந்தி ஒரு தேசியத் தலைவர். காங்கிரஸ் கட்சியின் அடிமட்டத் தொண்டருக்கு இருக்கும் விழிப்புணர்வுகூட ராகுலுக்கு இல்லை. இத்தகைய வீழ்ச்சி அவருக்கு எப்படி ஏற்பட்டது என்பதைப் புரிந்துகொள்வதே கடினமாக உள்ளது.
காங்கிரஸ் கட்சியும், ராகுல்காந்தியும் பாஜகவின் 'பி-டீம்' போல செயல்படுகின்றனர். இந்த நிலைப்பாடு இந்தியா முழுவதும் பின்பற்றப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, காங்கிரஸும், ராகுல் காந்தியும் பாஜகவின் 'பி-டீம்' என பினராயி விஜயன் கடந்த மார்ச் 21 ஆம் தேதி கடுமையாக விமர்சித்த நிலையில், மீண்டும் விமர்சித்துள்ளார்.
Kerala Chief Minister Pinarayi Vijayan has once again criticized Rahul Gandhi and the Congress as the BJP's 'B-Team'.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.