கேரள முதல்வர் பினராயி விஜயன் வெற்றி!
பினராயி விஜயன் வெற்றி குறித்து...
கேரள முதல்வர் பினராயி விஜயன் 19 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன. இதுவரையிலான, எண்ணிக்கையில் காங்கிரஸ் கூட்டணியே முன்னிலை வகித்து ஆட்சியைப் பிடிக்கவுள்ளது.
ஆரம்பத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தர்மடம் சட்டப்பேரவைத் தொகுதியில் பின்னடைவைச் சந்தித்தாலும் அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னிலை பெற்றார்.
Advertisement
இந்த நிலையில், அனைத்து சுற்றுகளின் முடிவில் 85,614 வாக்குகள் பெற்று 19, 247 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். முதல்வராக தொடர்ந்து கடந்த 3 தேர்தல்களிலும் பின்ராயி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.