தேர்தல் செய்திகள்

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

DIN

தமிழகத்தில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67%, தருமபுரியில் 75.44%, மத்திய சென்னை 67.37%, தென் சென்னை 67.82% வட சென்னையில் 69.26% வாக்குகள் பதிவாகியுள்ளன.

மாலை 3 மணிக்கு மேல் மக்கள் ஏராளமானோர் அதிகளவில் தங்களது வாக்குகளை செலுத்தினர். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் நடந்தது. கடந்த தேர்தலின்போது இந்த நேரத்தில் 69% என்ற அளவிலேயே இருந்தது.

ஒரு சில வாக்குச்சாவடிகளில் டோக்கன் வழங்கப்பட்டு வாக்குபதிவு நடைபெறுகிறது. வாக்கு இயந்திரங்களும் பெரிதாக பழுது ஏற்படாமல் வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததால் இனி மாநிலத்தின் எல்லைகளில் மட்டுமே கண்காணிப்பு நடக்கும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மற்றும் புதுவையில் ஒரு மக்களவைத் தொகுதிக்கும் இன்று காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT