நீலகிரி, தர்மபுரி, தஞ்சாவூர் தொகுதிகளில் திமுக வெற்றி!
நீலகிரி, தர்மபுரி, தஞ்சாவூர் தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் இதுவரை 111 தொகுதிகளில் பாஜகவும் 48 தொகுதிகளில் காங்கிரஸும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (மாலை 7.30 மணி நிலவரப்படி)
தற்போது, தமிழகத்தில் திமுகவின் வேட்பாளர்களான ஆ.ராசா (நீலகிரி தொகுதி), ஏ. மணி (தர்மபுரி), முரசொலி (தஞ்சாவூர்) ஆகியோர் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.