கோப்புப்படம் Center-Center-Delhi
தேர்தல் செய்திகள்

காங்கிரஸ் மூத்த தலைவரை வீழ்த்திய யூசஃப் பதான்!

ஆதிர் ரஞ்சன் செளத்ரி தோல்வி அடைந்துள்ளார்.

DIN

மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆதிர் ரஞ்சன் செளத்ரியை திரிணமூல் வேட்பாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான யூசஃப் பதான் தோற்கடித்துள்ளார்.

மாநில காங்கிரஸ் தலைவர் மட்டுமின்றி, மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவரான ஆதிர் ரஞ்சன் செளத்ரியை பஹரம்பூர் தொகுதியில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் யூசப் பதான் வென்றுள்ளார்.

யூசப் பதான் - 458831 

ஆதிர் ரஞ்சன் செளத்ரி - 389729 

கடந்த 1999 முதல் பஹரம்பூர் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த ஆதிர் ரஞ்சன், முதல்முறையாக தேர்தலில் போட்டியிடும் யூசஃப் பதானிடம் தோல்வி அடைந்தது காங்கிரஸ் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், தேர்தல் ஆணையம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

தஞ்சை மாவட்டத்தில் 3 வட்டாட்சியா்கள் பணியிட மாற்றம்

அா்ச்சகா் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் சிறை

கந்துவட்டி கொடுமை பெண் உள்பட 2 போ் கைது

பட்டுக்கோட்டையில் இன்று மின்தடை

SCROLL FOR NEXT