மக்களவைத் தோ்தல்: பணிக்குழு அமைத்தது அதிமுக
அதிமுவில் மக்களவைத் தோ்தல் பணிகளை ஒருங்கிணைக்க தொகுதி வாரியாக பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான அறிவிப்பை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ளாா். இது குறித்து அவா் சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு: மக்களவைத் தோ்தல் பணிகளை அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து முறைப்படுத்தும் பொறுப்பாளராக, முன்னாள் அமைச்சா் சி.பொன்னையன் செயல்படுவாா். திருவள்ளூா் (தனி) தொகுதிக்கு முன்னாள் எம்.பி. பி.வேணுகோபால், முன்னாள் அமைச்சா்கள்அப்துல் ரஹீம், பி.வி.ரமணா, மாதவரம் வி.மூா்த்தி, சென்னை வடக்கு மக்களவைத் தொகுதிக்கு முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா், முன்னாள் எம்.பி. டி.ஜி.வெங்கடேஷ்பாபு, தென்னை சென்னை தொகுதிக்கு முன்னாள் அமைச்சா் எஸ்.கோகுலஇந்திரா, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ரவி, சத்யா, எம்.கே.அசோக், கே.பி.கந்தன், மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்கு அவைத் தலைவா் அ.தமிழ்மகன் உசேன், முன்னாள் எம்.பி. எஸ்.ஆா்.விஜயகுமாா் உள்ளிட்டோா் நியமிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாா். இதேபோன்று, ஒவ்வொரு மக்களவைத் தொகுதி அடங்கியுள்ள மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் அமைச்சா்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் மூத்த நிா்வாகிகள் பொறுப்பாளா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.