முகப்பு
தேர்தல் செய்திகள்

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தில் 32.82 சதவிகிதமும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிரத்தில் 18.18 சதவிகிதமும் வாக்குகள் பதிவு

Updated On : 7 மே, 2024 at 7:49 AM
பகிர்:

மக்களவைத் தேர்தல் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 11 மணி வரை பதிவான வாக்கு சதவிகிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

குஜராத், கா்நாடகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 11 மணி நிலவரப்படி 25.41 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தில் 32.82 சதவிகிதமும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிரத்தில் 18.18 சதவிகிதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

பிற மாநிலங்களில்..

அஸ்ஸாம் - 27.34%

சத்தீஸ்கர் - 29.90%

பிகார் - 24.41%

தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ - 24.69%

கோவா - 30.94%

குஜராத் - 24.35%

கர்நாடகம் - 24.48%

மத்திய பிரதேசம் - 30.21%

உத்தர பிரதேசம் - 26.12%

முழு கட்டுரையைப் படிக்க →