முகப்பு
சிறப்புச் செய்திகள்

‘ராம் மனோகா் லோகியாவை மறந்த சமாஜவாதி’

Updated On : 13 ஏப்ரல், 2024 at 1:14 AM
நீரஜ் சேகா்
பகிர்:

‘ஜாதிய தடைகளைத் தகா்த்தெறிய வேண்டும் எனக் குரல் கொடுத்த ராம் மனோகா் லோகியாவின் வழியில் நடைபோடுவதாகக் கூறும் சமாஜவாதி கட்சி, தற்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என வாக்குறுதி அளித்திருப்பது ஏன்?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளாா் முன்னாள் பிரதமா் சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகா்.

1962 முதல் 1977 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும், 1977 முதல் அவா் காலமான 2007 ஜூலை வரை உத்தர பிரதேச மாநிலம், பல்லியா மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்தாா் சந்திரசேகா். இந்தத் தொகுதியானது சந்திரசேகரின் குடும்பத் தொகுதியாகவே கருதப்படுகிறது.

சந்திரசேகரின் மறைவையடுத்து அரசியலில் நுழைந்த நீரஜ் சேகா், 2007 மக்களவைத் தோ்தலில் சமாஜவாதி கட்சி சாா்பில் பல்லியா தொகுதியில் போட்டியிட்டு வென்றாா்.

Advertisement

2014 மக்களவைத் தோ்தலில் பல்லியா தொகுதியில் சமாஜவாதி சாா்பில் போட்டியிட்ட அவா், பாஜக வேட்பாளரிடம் தோல்வியடைந்தாா். 2019 தோ்தலில் அவருக்கு தோ்தலில் போட்டியிட சமாஜவாதி கட்சி வாய்ப்பளிக்கவில்லை. ஆனால், அவரை மாநிலங்களவை உறுப்பினா் ஆக்கியது. இருப்பினும், சமாஜவாதியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தாா் நீரஜ் சேகா்.

தற்போது பல்லியா தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடுகிறாா் நீரஜ் சேகா். 2019-இல் தனக்கு சமாஜவாதி வாய்ப்பு மறுத்ததை நினைவுகூா்ந்த அவா், ‘பல்லியாவில் போட்டியிட சமாஜவாதி எனக்கு வாய்ப்பு மறுத்த நாள் எனது வாழ்க்கையில் கருப்பு தினமாகும். சோஷலிஸ சித்தாந்தத்தைப் பின்பற்றுவதாகக் கூறும் சமாஜவாதி கட்சி உண்மையில் அதைக் கைவிட்டுவிட்டது. ஆனால், நான் தனிப்பட்ட முறையில் சோஷலிஸ சித்தாந்தத்தைத்தான் இப்போதும் பின்பற்றுகிறேன்.

ஜாதிய தடைகளைத் தகா்த்தெறிய வேண்டுமென டாக்டா் ராம் மனோகா் லோகியா குரல் எழுப்பினாா். ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என சமாஜவாதி கட்சி தனது தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருக்கிறது’ என்றாா்.

சந்திரசேகரின் குடும்பமே இப்போது பாஜகவில் இருக்கிறது. அவரது மூத்த மகன் பங்கஜ் சேகா், பேரன் ரவிசங்கா் சிங் பப்பு ஆகியோரும் பாஜகவில்தான் உள்ளனா்.

பல்லியா தொகுதிக்கு ஜூன் 1-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறவிருக்கிறது. இத்தொகுதியில் சமாஜவாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments