சென்னையில் விஜய் சாலைவலம்!
சென்னையில் தவெக தலைவர் விஜய் சாலைவலம் பற்றி...
சென்னையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் செவ்வாய்க்கிழமை சாலைவலம் மேற்கொண்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதிக் கட்டப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலை, பொன்னேரி, கொளத்தூர், வில்லிவாக்கம் பகுதிகளில் திங்கள்கிழமை சாலைவலம் மேற்கொண்டு விஜய் வாக்குச் சேகரித்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இன்று மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் இன்று மாலை 3 மணியளவில் கட்சித் தொண்டர்கள் மத்தியில் விஜய் பேசவுள்ளார்.
இதற்காக மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து நந்தனம் வரை பிரசார வாகனத்தில் நின்றபடி சாலைவலமாக விஜய் சென்றுகொண்டுள்ளார்.
முன்னதாக இன்று காலை மக்களுக்காக விஜய் வெளியிட்ட கடிதத்தில், லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
TVK Leader Vijay roadshow in Chennai!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.