தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம்: கனிமொழி
தேர்தல் முடிவுகள் குறித்து கனிமொழி தெரிவித்தது தொடர்பாக...
தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் என்று தேர்தல் முடிவுகள் குறித்து, திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், விஜய் தலைமையிலான தவெக பெரும்பாலான இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்ததாவது:
Advertisement
“ஜனநாயகத்தின் எஜமானர்களான மக்களின் தீர்பை ஏற்கிறோம். தோல்வி என்பது முடிவல்ல, அது ஒரு புதிய தொடக்கம் என்று தன் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நமக்கு உணர்த்தியவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
கழகத்திற்கு தோல்விகள் புதிதல்ல. அதிலிருந்து கற்ற பாடங்களும் குறைவல்ல. இந்தத் தேர்தல் முடிவுகளிலிருந்து புதிய பாடங்கள் கற்போம். சமூகத்தின் அடித்தளத்திலிருந்து இன்னும் வலிமையோடு செயல்படுவோம்.
அரசியல் - பண்பாட்டு உரிமைகளைக் காக்கும் நம் வரலாற்றுப் பணியை நவீன சிந்தனைகளோடு தொடர்ந்து மேற்கொள்வோம். வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், புதிதாக ஆட்சி அமைக்கவுள்ள அரசுக்கும் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.