கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம்: முதல்வர் பொறுப்புடன் செயல்பட போவது எப்போது?
கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு கனிமொழி எம்.பி. கண்டனம்.
பெண்ணை ஏமாற்றி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததாக தவெக நிர்வாகிகள் இருவரை, ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். இந்தச் சம்பவத்துக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சோ்ந்தவர் பாலமுருகன். தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்.
இவரது நண்பரும், தவெக நிர்வாகியுமான ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயபால் என்பவரும் சேர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சோ்ந்த இளம்பெண் ஒருவரை வேலை வாங்கித் தருவதாக காரில் அழைத்துச் சென்று ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்து குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, கூட்டுப் பாலியல் வன்முறை செய்ததாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட இளம்பெண் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின்பேரில், பாலமுருகன், ஜெயபால் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், அவர்கள் இருவரையும் திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கு கண்டனம் தெரிவித்து கனிமொழி எம்.பி. தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”ஸ்ரீவைகுண்டம் அருகே பெண் ஒருவர், தவெக நிர்வாகிகள் இருவரால் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் செல்லப்பட்டு, மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ள இன்றைய சூழலில், தேர்தல் காலத்தைப் போல திமுகவின் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, தாங்கள் தான் ஆளுங்கட்சி என்பதை உணர்ந்து 'பொறுப்புடன்' முதல்வர் விஜய் செயல்பட போவது எப்போது?” என்று குறிப்பிட்டுள்ளார்.
MP Kanimozhi condemns gang-rape incident.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.